Saturday, January 17, 2009

"ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் ஆஸ்பத்திரியாக விளங்குகிறது''

ஆரம்பசுகாதாரநிலையங்கள்
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு துணைசுகாதார மையமும், 30 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார மையமும் உள்ளன. பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை தேவைப்படின், முன்னதாக அவர்களை ஆம்புலன்ஸ் வேன் மூலம் பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்து விடுவோம். 24 மணிநேரமும் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப சுகாதார நிலைய போன் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு அவர்கள் அழைத்தால் உடனே ஆம்புலன்ஸ் வேனை அனுப்பி அழைத்து வந்து சிகிச்சைஅளிக்கிறோம்.

அங்குஅனுமதிக்கப்பட்டுகுழந்தைபெற்றுள்ளதாய்கள்கூறியதாவது:- தனியார் ஆஸ்பத்திரி போல நன்றாக எங்களை டாக்டர்களும், நர்சுகளும் கவனிக்கிறார்கள். அதுமட்டும் அல்ல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு திட்டத்தில் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் ஜனனி சுரக்ஷா யோகாஜனம் திட்டத்தில் குழந்தை பெற்று வீடு திரும்பும் முன் எங்களிடம் ரூ.700 தருகிறார்கள். எனவே, இப்போது பல முன்னேற்றங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் காண முடிகிறது. ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள்விளங்குகின்றன.
சத்துள்ளஉணவு

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மதியம் கர்ப்பிணி பெண்களுக்கு சாப்பாடு கொடுக்கப்படுகிறது . அவர்கள் வாழை இலையில் சோறு, சாம்பார், ரசம், மோர், முருங்கை கீரை பொறியல், கூட்டு, அவித்த முட்டை, அவித்த கொண்டைக்கடலை ஆகியவற்றுடன் சாப்பிடுவதை பார்க்க முடிகிறது. வாரம் தோறும் இந்த சாப்பாடு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் மாதம் ஒரு நாள் சாப்பிடுகிறார்கள். சத்துள்ள உணவு சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இந்த சாப்பாடு வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment