24 மணி நேர பிரசவம்! தமிழ்நாடு சாதனை!!
தமிழ்நாட்டில் இருக்கும் 1400க்கும் மேற்பட்ட எல்லா சுகாதார நிலையங்களிலுமே 24 மணி நேர பிரசவ சேவை மையங்களாக செயல்பட இருக்கிறது. எல்லா சுகாதார மையங்களுமே பிரசவ மையங்களாக மாற்றப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை.
* பயிற்சி பெற்ற செவிலியர்களால் 24 மணி நேர பிரசவ சேவை உறுதி செய்யப்படுகிறது.
* தாய்சேய் மரணம் தவிர்க்கப்பட்டு, 24 மணி நேர சிறப்பான பிரசவ சேவை கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கிறது.
* அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்கள் அவர்கள் வாழும் கிராமங்களுக்கு அருகிலேயே நடப்பதால் நல்ல சுகாதாரமான சூழ்நிலைகளில் மக்களுக்கு பிரசவ சேவை கிடைக்கிறது.
* சாதாரண பிரசவத்திற்கு ஏழை எளியோர் தனியார் மருத்துவ மனைக்குச் சென்று பிரசவத்திற்காக செலவிடும் செலவு தவிர்க்கப்படுகிறது.
24 மணி நேர சேவையின் பின்னணிவிவரம்
*1999-ம் ஆண்டில் 3 செவிலியர் பணியமைப்புடன் கூடிய இந்த 24 மணி நேர பிரசவ கவனிப்பு சேவை திட்டம் 90 ஆரம்ப சுகாதார நிலை யங்களில் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
* பின்னர் இத்திட்டம் படிப்படியாக உருப்பெற்று மேலும் 90 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் விரி வடைந்து, அரசு பொறுப்பேற்றவுடன் 600 ஆரம்ப சுகா தார நிலையங்களில் 1800 செவிலியர்களுடன் விரிவுபடுத்தப்பட்டது.
* கடந்த நிதியாண்டில் மேலும் 220 ஆரம்ப சுகா தார நிலையங்களில் 660 செவிலியர்களுடன் விரிவு படுத்தப்பட்டு 1000 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேர பிரசவ சேவை மையங்களாக ஆணையிடப் பட்டு தற்போது செயல்பட்டு வருகின்றன.
* நடப்பு நிதியாண்டில் மீத முள்ள 421 ஆரம்ப சுகாதார நிலை யங்களும் 24 மணி நேர பிரசவ சேவை மையங்களாக ஆணையிடப்பட்டு தமிழ கத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணி நேர பிரசவ சேவை மையங்களாக செயல்பட உள்ளன. இதன்படி நடப் பாண்டில் புதிதாக 1263 செவிலியர்களும், 842 துப்புரவு பணியாளர்களும் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment