Showing posts with label மரு.கொ.ச.தி.சுரேஸ். Show all posts
Showing posts with label மரு.கொ.ச.தி.சுரேஸ். Show all posts

Saturday, January 17, 2009

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்

தடுப்பு மருந்துத் துறை ,

செய்யாறு சுகாதார மாவட்டம்


பிறந்து 15 தினங்களுக்குள் போடப்படும் காச நோய் தடுப்பு ஊசி,

போலியோ சொட்டு மருந்து முதல் ஒரு மாத இடைவெளியில் அனைத்து தடுப்பூசிகளும்ஒருவயதிற்குள் போடப்பட்டு விடுகிறது.


பள்ளி குழந்தைகளுக்கு பள்ளி சிறார் நல திட்டம் செயல்படுத்தப்படுகிறது,

வளரிளம் பெண்களுக்கான இரும்பு சத்து மாத்திரை வழங்கும் திட்டம்

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டம்
ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டம்
கர்ப்பினி பெண்களுக்கான முழு பரிசோதனை மற்றும் சத்தான மதிய உணவு

பிரசவத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பினிகளுக்கு மூன்று நாட்களுக்கு மூன்று வேலை உனவு.
24மணி நேர மருத்துவ சேவைக்கு மூன்று செவிலியர்கள் நியமிக்கப்பட்டு பிரசவங்கள் இலவசமாக பார்க்கப்படுகிறது
வளர் இளம் பெண்களுக்கான இரத்த சோகையைதடுப்பதற்காக இரும்பு சத்து மாத்திரைஒவ்வொறு வியாழக்கிழமையும் வழங்கப்பட்டு வருகிறது.
பிறப்பு இறப்புகளை பதிவு செய்தல்
பிறப்பு இறப்புகளை பதிவு செய்பவர்
கிராமங்கள் - கிராம நிர்வாக அலுவலர்
நகராட்சி -துப்புறவு ஆய்வாளர்
மருத்துவமனை -மருத்துவ அலுவலர்
வீட்டில் நிகழ்ந்த பிறப்புகளை குடும்ப தலைவர் உரியவரிடம்

பதிவு செய்யவேண்டும்
பிறப்பு பதிவு பிறந்த இடத்திலேயே பதிவு செய்யப்படவேண்டும்
குழந்தையின் பெயரின்றியே பதிவு செய்ய முடியும்
ஒரு பிறப்பு சான்றிதழ் உங்கள் குழந்தையின் வாழ்வை எளிதாக்குகிறது
இது உங்கள் குழந்தை எந்நாட்டைச் சேர்ந்தது என்பதற்கான சட்டப்பூர்வமான ஆதாரமாகும்
குழந்தையின் பெயரை பதிவு செய்தல்
இலவச பிறப்பு சான்று வழங்குதல்
பிறப்பு சான்றின் பயன்கள்
பிறந்த இடத்திற்கான அத்தாட்சி
பிறந்த தேதி
குடியுரிமைக்குரிய அத்தாட்சி பெற
ஓட்டுனர் உரிமை பெற
பள்ளிகளில் சேர
வயதை நிருபிக்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க

பிறப்பு இறப்பு பதிவின் முக்கியத்துவம் மற்றும் சான்றின் பயன்கள்.



பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை ,

           செய்யாறு சுகாதார மாவட்டம்


பிறப்பு இறப்புகளை பதிவு செய்தல்

பிறப்பு இறப்புகளை பதிவு செய்பவர்


கிராமங்கள் -
கிராம நிர்வாக அலுவலர்.

நகராட்சி- துப்புறவு ஆய்வாளர்.
மருத்துவமனை - 
பொறுப்பு மருத்துவ அலுவலர்.


வீட்டில் நிகழ்ந்த பிறப்புகளை குடும்ப தலைவர்

 பதிவு செய்யவேண்டும்
பிறப்பு பதிவு பிறந்த இடத்திலேயே பதிவு செய்யப்படவேண்டும்.


குழந்தையின் பெயரின்றியே பதிவு செய்ய முடியும்


ஒரு பிறப்பு சான்றிதழ் உங்கள் குழந்தையின் வாழ்வை எளிதாக்குகிறது.


இது உங்கள் குழந்தை எந்நாட்டைச் சேர்ந்தது

 என்பதற்கான சட்டப்பூர்வமான ஆதாரமாகும்


குழந்தையின் பெயரை பதிவு செய்தல்


  இலவச பிறப்பு சான்று வழங்குதல்


   பிறப்பு சான்றின் பயன்கள்


   பிறந்த இடத்திற்கான அத்தாட்சி


   பிறந்த தேதி


   குடியுரிமைக்குரிய அத்தாட்சி பெற


   ஓட்டுனர் உரிமை பெற


   பள்ளிகளில் சேர


   வயதை நிருபிக்க


  பாஸ்போர்ட் விண்ணப்பிக்க

பயனாளிகள் நல சங்கம்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான உபகரனங்கள் மற்றும் அத்தியவாசிய பொருட்களை ஆரம்ப சுகாதார நிலையங்களே உடனடி தேவைக்கேற்ப வாங்கிகொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.
கட்டிடங்களில்ஏற்படும் சிறு சிறு பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்து கொள்ளப்படுகிறது
அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
புற நோயாளிகளுக் சுத்திகரிக்கப்பட்ட குடி தண்ணீர்
ஆரோக்கியமான சூழலுக்கு நிழல் தரும் மரங்கள்
மூலிகை தோட்டங்கள்
பாதுகாப்பிற்கான சுற்று சுவர்கள்
பாதுகாப்பிற்கான ஜண்ணல்கள் மற்றும் கதவுகள்
குடி நீர் வசதிகள்
நோயாளிகளுக்கு விபரங்கள் தெரிவிக்கும் விளம்பர பலகைகள்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த எதிர்காலத் திட்டம்

தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களை, மத்திய அரசு நிர்ணயித்துள்ள சுகாதார தரத்திற்கு ஏற்ப தன்னிறைவு பெற்ற தரமானதாக மாற்ற முயற்சி நடக்கிறது. இந்த திட்டத்தில் முதல் பகுதியாக 30 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்கள் 2009-ம் ஆண்டுக்குள் தன்னிறைவு பெற்றுவிடும். படிப்படியாக திட்டம் செயல்படுத்தப்பட்டு, போதிய கட்டிட வசதிகள்,போதிய கருவிகள் அனைத்தும் வாங்கப்பட்டு தமிழ்நாட்டில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 2012-ம் ஆண்டுஇறுதிக்குள் இந்திய சுகாதார தரஅளவு பெற்ற தன்னிறைவுபெற்றவைகளாகவிளங்கும்.

"ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் ஆஸ்பத்திரியாக விளங்குகிறது''

ஆரம்பசுகாதாரநிலையங்கள்
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு துணைசுகாதார மையமும், 30 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார மையமும் உள்ளன. பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை தேவைப்படின், முன்னதாக அவர்களை ஆம்புலன்ஸ் வேன் மூலம் பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்து விடுவோம். 24 மணிநேரமும் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப சுகாதார நிலைய போன் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு அவர்கள் அழைத்தால் உடனே ஆம்புலன்ஸ் வேனை அனுப்பி அழைத்து வந்து சிகிச்சைஅளிக்கிறோம்.

அங்குஅனுமதிக்கப்பட்டுகுழந்தைபெற்றுள்ளதாய்கள்கூறியதாவது:- தனியார் ஆஸ்பத்திரி போல நன்றாக எங்களை டாக்டர்களும், நர்சுகளும் கவனிக்கிறார்கள். அதுமட்டும் அல்ல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு திட்டத்தில் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் ஜனனி சுரக்ஷா யோகாஜனம் திட்டத்தில் குழந்தை பெற்று வீடு திரும்பும் முன் எங்களிடம் ரூ.700 தருகிறார்கள். எனவே, இப்போது பல முன்னேற்றங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் காண முடிகிறது. ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள்விளங்குகின்றன.
சத்துள்ளஉணவு

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மதியம் கர்ப்பிணி பெண்களுக்கு சாப்பாடு கொடுக்கப்படுகிறது . அவர்கள் வாழை இலையில் சோறு, சாம்பார், ரசம், மோர், முருங்கை கீரை பொறியல், கூட்டு, அவித்த முட்டை, அவித்த கொண்டைக்கடலை ஆகியவற்றுடன் சாப்பிடுவதை பார்க்க முடிகிறது. வாரம் தோறும் இந்த சாப்பாடு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் மாதம் ஒரு நாள் சாப்பிடுகிறார்கள். சத்துள்ள உணவு சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இந்த சாப்பாடு வழங்கப்படுகிறது.

Thursday, January 15, 2009

செய்யாறு சுகாதார மாவட்டம்

தொலைக்கட்சி பெட்டி
ஆரம்ப சுகாதர நிலயங்கள் தற்போது நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.தரமான குடிநீர்,கழிப்பறை,காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமை,பிணியாளர்களுக்கு தொலைக்கட்சி பெட்டி,பிரசவித்த தாய்மார்களுக்கும்,குழந்தைகளுக்கும்,குடிக்க குளிக்க சுடுநீர், என அதிக வசதிகள் இருக்கிறது.
ஜனனி சுரக்ஷா யோஜனா
வறுமை கோட்டிற்கு கீழுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவமான பெண்களுக்கு முதல் இரு பிரசவத்திற்கு ரூ.700/ ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

செய்யாறு சுகாதார மாவட்டம்

கர்ப்பிணி பெண்கள் மருத்துவ உதவிக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவதால் நவீன மருத்துவக் கருவிகள், மேம்படுத்தப்பட்ட மருத்துவக்கூடம் அத்துடன் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்குவது மற்றும் தொலைக்காட்சி தொடர்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

செய்யாறு சுகாதார மாவட்டம்

சத்திய விஜயநகரம் ஆரம்ப சுகாதார நிலையம்:

மூலிகை தோட்டம்:

தற்போது ஆரம்ப சுகாதார நிலைய வளாகத் திற்குள் கொரியன் கிராஸ் புல் வைத்தும், செயற்கை நீரூற்று வைக்க நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். லட்சுமி சரஸ்வதி டெக்ஸ்டைல் நிறுவனம் சார்பில் பூங்காவுடன் செயற்கை நீரூற்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சுகாதார நிலையங்களை நவீனப்படுத்த தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களும் முன் வரலாம்.

செய்யாறு சுகாதார மாவட்டம்


தனியாருக்கு போட்டியாக ஆரம்ப சுகாதார நிலையங்களை நவீனமாக மாற்றி வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. செய்யாறு சுகாதார மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அலுவலகத் திற்கு உட்பட்டு 35 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள் ளன. இதன் கீழ் 157 துணை சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால் நோயாளிகள் சிகிச்சை பெற தயங்கினர். இதனைக் கருத்தில் கொண்டு சுகாதார நிலையங்களை மேம்படுத்தவும், சுகாதாரமாக மாற்றவும் 2007ம் ஆண்டு தேசிய ஊரக சுகாதார திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டத் திற்காக ஆண்டு தோறும் ஒவ் வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் தலா ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப் படுகிறது. இந்த நிதி சுகாதார துறை துணை இயக்குனர் மூலம் அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்களை கொண்ட பயனாளிகள் நல சங்கத்திடம் வழங்கி ஆரம்ப சுகாதார நிலையங்களை பராமரிக்கின்றனர். இதில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங் களிலும் தனியாரை மிஞ்சும் வகையில் சிறப்பு கருவிகள், ஸ்கேன் வசதி, படுக்கை, சிசு வளர்ச்சி, சிசுவின் இதய சோதனை செய்ய சிறப்பு கருவிகள் உட்பட பல மாற்றங்கள் செய்யப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வர "ஆண்டி நேட்டர் கார்டு' (அடையாள அட்டை) வழங்கப்படுகிறது. இந்த அட்டையில் உள்ள எண் ணிற்கு தொடர்பு கொண் டால் ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்து செல்லப்படுவர்.