Thursday, February 5, 2009

பயணாளிகள் நல சங்கம்.

அரசு,தனியார் பங்களிப்பின் மூலம்
ஆரம்ப சுகாதார நிலைய வசதிகளை
மேம்படுத்துதல்-சார்பாக.
செய்யாறு சுகாதார மாவட்டம்.

மரு.கொ.ச.தி.சுரேஸ்,எம்பிபிஎஸ்,டிபிஎச். 22.எப்.கன்னியம்மன் கோவில் தெரு,
துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள். நரசிம்மன் நகர்,
செய்யாறு-604 407 திருவண்ணாமலை மாவட்டம். E-mail : dphcyr@tn.nic.in


அன்புடையீர்,

வணக்கம்,

ஆரம்ப சுகாதார நிலையங்களின் அடிப்படை வசதிகளை கொடையுள்ளம் கொண்ட
செல்வந்தர்கள்தன்னார்வ தொண்டு அமைப்புகள்,அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்து மக்கள் பயன்பெரும் வகையில் மருத்துவ வசதிகளை மேம்படுத்துதல் இக்கோரிக்கையின் நோக்கமாகும்.

மேலும் இத்தகைய பணிகளுக்காக தொண்டுள்ளம் கொண்டவர்களிடமிருந்து பெறப்படுகின்ற நிதிக்கு இனையாக தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்திலிருந்து 50 :50 வீதத்தில் நிதி ஒதுக்குவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆரணி அடுததுள்ள சத்திய விஜய நகர ஆரம்ப சுகாதார நிலைய தின விழாவில் கூறியுள்ளதால் தங்களை போன்ற தொண்டுள்ளம் கொண்ட செல்வந்தர்களின் பங்களிப்புடன் அரசின் நமக்கு நாமே திட்டத்திலிருந்து? கிடைக்கும் நிதியையும் சேர்த்தால் மேலும் மிக சிறந்த முறையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்தி ஏழை மற்றும் நடுத்தர மக்களை இலவசமாக பயன்பெற செய்ய முடியும்.

தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் மூலமாக அமைக்கப்பட்ட பயனாளிகள் நல சங்க நிதியின் மூலம் தற்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் வசதிகள் மக்கள் விரும்பி வந்?து சிகிச்சை பெற்று கொள்ளும் வகையில் பெரிதும் முன்னேற்றம் கண்டுள்ளது,

இது மட்டுமல்லாது கர்ப்பிணிகள் அதிக எண்ணிக்கையில் பிரசவத்திற்காக ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்து பிரசவம் பார்த்துக் கொள்கின்றனர்.

எனவே பயனாளிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்கும் பொருட்டு ஒவ்வொறு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் செயல்பட்டு வரும் பயானாளிகள் நலச் சங்கம்(Patient Welfare Society)க்கு நிதி வழங்குவதன் மூலம் கீழ் கண்ட கூடுதல் வசதிகளை வழங்கிடுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

1.வாட்டர் கீட்டர்( Water Heater).
2.வாஷிங் மெஷின்
3.சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வசதி
4.சுற்று சுவர்
5.ஆம்புலன்ஸ் மற்றும் ஓட்டுநர் பராமரிப்பு நிதி
6.பயனாளிகளுக்கு உணவு சமைத்திட பாத்திரங்கள் வழங்குதல்.
7.அத்தியவாசிய மருந்துகள் வாங்கி வழங்குதல்
8.பழுதடைந்த பழுது பார்த்தல்
9.கட்டிடம் பழுது பார்த்தல்- 3 இலட்சம்.
10.சுகாதாரப் பூங்கா நிர்மானம் மற்றும் பராமரிப்பு - 4 இலட்சம்.
11. ஸ்கேன் மெஷின் - 3.5 இலட்சம்.
12.செமி ஆட்டோ அனலைசர் - 1 இலட்சம்.
13.முட நீக்கியல் கருவிகள் மற்றும் மருத்துவர்(Physiotherapy) ヨ 5-இலட்சம்.
14.அறுவை அரங்குடன் கூடிய 10 படுக்கை வார்டு கொன்ட கட்டிடம் கட்டி தருதல்.
15.பயனாளிகள் ஓய்வு கூடம் மற்றும் கழிப்பறை.
16.மகப்பேறு மருத்துவர் - அயலிடப்பணி - 1.5 இலட்சம்.
17.குழந்தைகள் பூங்கா - 2 இலட்சம்.
18.கூடுதல் கருவிகள்.
19.குளிர் சாதன வசதி.
20.வளரிளம் பெண்களுக்கான சுகாதார சங்க கூடம் மற்றும் கருவிகள்.



துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்.
செய்யாறு -604407.

1 comment:

  1. நல்ல பதிவு. பயனாளிகள் நலச்சங்கம் என்பது சரியான மொழிபெயற்பா? பிணியாளர் நலச்சங்கம் என்பது சரியாய் இருக்குமா? தங்கள் ஆய்வுக்கு விடுகிறேன்
    www.thogamalaiphc.blogspot.com

    ReplyDelete