Friday, September 25, 2009

கண்ணொளி காப்பதில் கலைஞரின் திட்டம்

எழில் கொஞ்சும் ஓய்விடங்கள் -ஆரம்ப சுகாதார நிலையம், தேவிகாபுரம்

சுகாதாரப்பூங்கா - நீர் ஊற்று தேவிகாபுரம்

வரவேற்கும் வளாகங்கள் ஆரம்ப சுகாதார நிலையம், மாமண்டூர்

ஊரக சுகாதார முன்னேற்றம் -துணை இயக்குனருக்கு கௌரவிப்பு

இந்திய மருத்துவ சங்கம் - இளைய இயக்குனருக்கு பாராட்டு

பிறப்பு இறப்பு பதிவு அலுவலகம் திறப்பு -சட்டமன்ற உறுப்பினர்,ஆரணி

சுகாதார ஆய்வாளருக்கு அதிகாரம் -இலவச பிறப்பு சான்று வழங்குதல்

யானைக்கால் நோயாளிக்கு பராமரிப்பு பொருள்கள்

தாய் சேய் நலத்தில் தனி கவனம் - ஆரம்ப சுகாதார நிலையங்கள்

Thursday, July 30, 2009

01.08.2009 முதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகங்கள்

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை

டாக்டர்.K.S.T.சுரேரெஸ்,MBBS,DPH.,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
செய்யாறு-604407.

அன்புடையீர்,
வணக்கம்.

“அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிகழும் பிறப்பு,இறப்பு மற்றும் இறந்து பிறந்தவைகளை உடனுக்குடன் பதிவு செய்து பொது மக்களுக்கு அப்போதே இலவச சான்றுகளை வழங்கவும் குறிப்பாக பிறப்பு சான்றை உடனடியாக இலவசமாக வழங்கவும் ஏதுவாக ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்களை கூடுதல் பிறப்பு இறப்பு பதிவாளர்களாக நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிகழும் நிகழ்வுகளை 01.08.2009 முதல் அங்கேயே பதிவு செய்திடவும் ஆணை வழங்கியதன் அடிப்படையில் செய்யாறு சுகாதார மாவட்ட்த்தில் உள்ள 38 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பிறப்பு இறப்பு பதிவு அலுவலகம் Iன்று முதல் செயல்பட உள்ளது இனி வரும் காலங்களில் பிறப்பு இறப்பு சான்று பெறுவதில் காலதாமதமின்றி சிக்கலின்றி பொது மக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே இலவச பிறப்பு சான்றுகளை பெற்று கொள்ள முடியும்”.

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
செய்யாறு-604407.

Wednesday, June 3, 2009

CHEYYAR HUD - GUIDELINES FOR ISSUING FREE BIRTH CERTIFICATES

CHEYYAR HUD - GUIDELINES FOR ISSUING FREE BIRTH CERTIFICATES

As per the letter R.No. 47721/SBHI-I/S1/2009, Dated: 18.05.2009 of the Director of Public Health and Preventive Medicine, Chennai-6. the following Guidelines may be observed for issuing Free Birth Certificates.

1.Every year April/May months are to observed as Free Birth Certificate issuing months.
2.IEC Activities to be carried out on the importance of registering all Births and Deaths in time.
3.To ensure that the Birth & Death certificates are issued immediately after the registration.
4.To inform the parents about the name inclusion of a child within a year at free of cost.
5.To take necessary action for registering the unregistered events.
6.The importance of above activities shall be made known to the public through “Tom Tom”, Hand Bills, Rallies and local TV channels.
7.The same may also be discussed at the “Grama Sabha Meeting”.
Steps to be taken by All Tahsildars, Municipal Commissioners and Executive Officers of Town Panchayats:
i.All Tahsildars are requested to convene a meeting for all VAOs, RIs in their jurisdiction and to inform about the issue of Free Birth Certificates to all children upto 5 years immediately after the registration.

ii.All the Municipal Commissioners and Executive Officers of all Town Panchayats are requested to issue Free Birth Certificates to all children upto 5 years immediately after the registration.

iii. As a special case if the Birth register is not available in the concerned office from the year 2003 action may be initiated by all Tahsildars and Executive Officers of Town Panchayats to get it from the concerned Sub Registrar and hand over it to VAOs /Sanitary Inspectors for inclusion of name and issuing Free Birth Certificated upto 5 years.

iv.All Tahsildars should get required Birth Certificates forms from the office of the District Revenue Officer and distribute to all VAOs.

v.All Registrars should maintain a register about the issue of Free Birth Certificates.

vi.Action may be initiated to issue Free Birth Certificates within a week for the children born during April/May of this year.

vii.The Chief Educational Officer, District Educational Officer and all Elementary Educational Officers are requested to insist all school authorities to ask for Birth Certificates at the time of school admission without fail.

viii.A report may be submitted to the Deputy Director of Health Services, Cheyyar about the No. of Certificates issued.

Deputy Director of Health Services,
Cheyyar – 604407.

Thursday, February 5, 2009

பயணாளிகள் நல சங்கம்.

அரசு,தனியார் பங்களிப்பின் மூலம்
ஆரம்ப சுகாதார நிலைய வசதிகளை
மேம்படுத்துதல்-சார்பாக.
செய்யாறு சுகாதார மாவட்டம்.

மரு.கொ.ச.தி.சுரேஸ்,எம்பிபிஎஸ்,டிபிஎச். 22.எப்.கன்னியம்மன் கோவில் தெரு,
துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள். நரசிம்மன் நகர்,
செய்யாறு-604 407 திருவண்ணாமலை மாவட்டம். E-mail : dphcyr@tn.nic.in


அன்புடையீர்,

வணக்கம்,

ஆரம்ப சுகாதார நிலையங்களின் அடிப்படை வசதிகளை கொடையுள்ளம் கொண்ட
செல்வந்தர்கள்தன்னார்வ தொண்டு அமைப்புகள்,அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்து மக்கள் பயன்பெரும் வகையில் மருத்துவ வசதிகளை மேம்படுத்துதல் இக்கோரிக்கையின் நோக்கமாகும்.

மேலும் இத்தகைய பணிகளுக்காக தொண்டுள்ளம் கொண்டவர்களிடமிருந்து பெறப்படுகின்ற நிதிக்கு இனையாக தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்திலிருந்து 50 :50 வீதத்தில் நிதி ஒதுக்குவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆரணி அடுததுள்ள சத்திய விஜய நகர ஆரம்ப சுகாதார நிலைய தின விழாவில் கூறியுள்ளதால் தங்களை போன்ற தொண்டுள்ளம் கொண்ட செல்வந்தர்களின் பங்களிப்புடன் அரசின் நமக்கு நாமே திட்டத்திலிருந்து? கிடைக்கும் நிதியையும் சேர்த்தால் மேலும் மிக சிறந்த முறையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்தி ஏழை மற்றும் நடுத்தர மக்களை இலவசமாக பயன்பெற செய்ய முடியும்.

தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் மூலமாக அமைக்கப்பட்ட பயனாளிகள் நல சங்க நிதியின் மூலம் தற்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் வசதிகள் மக்கள் விரும்பி வந்?து சிகிச்சை பெற்று கொள்ளும் வகையில் பெரிதும் முன்னேற்றம் கண்டுள்ளது,

இது மட்டுமல்லாது கர்ப்பிணிகள் அதிக எண்ணிக்கையில் பிரசவத்திற்காக ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்து பிரசவம் பார்த்துக் கொள்கின்றனர்.

எனவே பயனாளிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்கும் பொருட்டு ஒவ்வொறு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் செயல்பட்டு வரும் பயானாளிகள் நலச் சங்கம்(Patient Welfare Society)க்கு நிதி வழங்குவதன் மூலம் கீழ் கண்ட கூடுதல் வசதிகளை வழங்கிடுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

1.வாட்டர் கீட்டர்( Water Heater).
2.வாஷிங் மெஷின்
3.சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வசதி
4.சுற்று சுவர்
5.ஆம்புலன்ஸ் மற்றும் ஓட்டுநர் பராமரிப்பு நிதி
6.பயனாளிகளுக்கு உணவு சமைத்திட பாத்திரங்கள் வழங்குதல்.
7.அத்தியவாசிய மருந்துகள் வாங்கி வழங்குதல்
8.பழுதடைந்த பழுது பார்த்தல்
9.கட்டிடம் பழுது பார்த்தல்- 3 இலட்சம்.
10.சுகாதாரப் பூங்கா நிர்மானம் மற்றும் பராமரிப்பு - 4 இலட்சம்.
11. ஸ்கேன் மெஷின் - 3.5 இலட்சம்.
12.செமி ஆட்டோ அனலைசர் - 1 இலட்சம்.
13.முட நீக்கியல் கருவிகள் மற்றும் மருத்துவர்(Physiotherapy) ヨ 5-இலட்சம்.
14.அறுவை அரங்குடன் கூடிய 10 படுக்கை வார்டு கொன்ட கட்டிடம் கட்டி தருதல்.
15.பயனாளிகள் ஓய்வு கூடம் மற்றும் கழிப்பறை.
16.மகப்பேறு மருத்துவர் - அயலிடப்பணி - 1.5 இலட்சம்.
17.குழந்தைகள் பூங்கா - 2 இலட்சம்.
18.கூடுதல் கருவிகள்.
19.குளிர் சாதன வசதி.
20.வளரிளம் பெண்களுக்கான சுகாதார சங்க கூடம் மற்றும் கருவிகள்.



துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்.
செய்யாறு -604407.

Friday, January 30, 2009

போலியோ சொட்டு மருந்து மிகவும் பாதுகாப்பானது

போலியோ சொட்டு மருந்து மிகவும் பாதுகாப்பானது,எத்தனை முறை வேண்டுமானாலும் கொடுக்கலாம் அத‌னால் எந்த‌ பாதிப்பும் இல்லை,உல‌க‌ சுகாதார‌ நிறுவ‌ன‌த்தின் அங்கிகார‌ம் பெற்ற‌து.

ஓரிரு நாட்களுக்கு முன்பு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் கொடுக்கவேண்டும்.

முகாம் நாட்களில் கொடுக்கப்படும் சொட்டு மருந்து வழக்கமான தவணைகளில்
கொடுக்கப்படும் சொட்டு மருந்திற்கு மாற்று அல்ல இது ஒரு கூடுதல் தவணையாகும்.

புதிதாக‌ பிற‌ந்த‌ குழ‌ந்தைக‌ளுக்கும் முகாம் நாட்க‌ளில் சொட்டு ம‌ருந்து கொடுப்ப‌து அவ‌சிய‌மாகும்.

Friday, January 23, 2009

24 மணி நேர பிரசவம்! தமிழ்நாடு சாதனை!!

24 மணி நேர பிரசவம்! தமிழ்நாடு சாதனை!!
தமிழ்நாட்டில் இருக்கும் 1400க்கும் மேற்பட்ட எல்லா சுகாதார நிலையங்களிலுமே 24 மணி நேர பிரசவ சேவை மையங்களாக செயல்பட இருக்கிறது. எல்லா சுகாதார மையங்களுமே பிரசவ மையங்களாக மாற்றப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை.
* பயிற்சி பெற்ற செவிலியர்களால் 24 மணி நேர பிரசவ சேவை உறுதி செய்யப்படுகிறது.
* தாய்சேய் மரணம் தவிர்க்கப்பட்டு, 24 மணி நேர சிறப்பான பிரசவ சேவை கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கிறது.
* அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்கள் அவர்கள் வாழும் கிராமங்களுக்கு அருகிலேயே நடப்பதால் நல்ல சுகாதாரமான சூழ்நிலைகளில் மக்களுக்கு பிரசவ சேவை கிடைக்கிறது.
* சாதாரண பிரசவத்திற்கு ஏழை எளியோர் தனியார் மருத்துவ மனைக்குச் சென்று பிரசவத்திற்காக செலவிடும் செலவு தவிர்க்கப்படுகிறது.
24 மணி நேர சேவையின் பின்னணிவிவரம்
*1999-ம் ஆண்டில் 3 செவிலியர் பணியமைப்புடன் கூடிய இந்த 24 மணி நேர பிரசவ கவனிப்பு சேவை திட்டம் 90 ஆரம்ப சுகாதார நிலை யங்களில் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
* பின்னர் இத்திட்டம் படிப்படியாக உருப்பெற்று மேலும் 90 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் விரி வடைந்து, அரசு பொறுப்பேற்றவுடன் 600 ஆரம்ப சுகா தார நிலையங்களில் 1800 செவிலியர்களுடன் விரிவுபடுத்தப்பட்டது.
* கடந்த நிதியாண்டில் மேலும் 220 ஆரம்ப சுகா தார நிலையங்களில் 660 செவிலியர்களுடன் விரிவு படுத்தப்பட்டு 1000 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேர பிரசவ சேவை மையங்களாக ஆணையிடப் பட்டு தற்போது செயல்பட்டு வருகின்றன.
* நடப்பு நிதியாண்டில் மீத முள்ள 421 ஆரம்ப சுகாதார நிலை யங்களும் 24 மணி நேர பிரசவ சேவை மையங்களாக ஆணையிடப்பட்டு தமிழ கத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணி நேர பிரசவ சேவை மையங்களாக செயல்பட உள்ளன. இதன்படி நடப் பாண்டில் புதிதாக 1263 செவிலியர்களும், 842 துப்புரவு பணியாளர்களும் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம்‍‍ நாள் 01 02 2009

போலியோ சொட்டு மருந்து கொடுப்பதனால் எந்தவிதமான பின் விளைவுகளும் இது வரை ஏற்பட்டதில்லை என்பது ஒவ்வொறு புதன்கிழமையும் தன் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொன்ட ஒவ்வொறு தாய்மாருக்கும் தெரியும்.வீன் புரளியை கிளப்புபவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் அவர்கள் பேச்சை நம்பி உங்கள் குழந்தைக்கு போலியா சொட்டு மருந்து கொடுக்காமல் விட்டுவிடாதீர்கள்.போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுவதன் மூலம் உங்கள் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது.

Saturday, January 17, 2009

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்

தடுப்பு மருந்துத் துறை ,

செய்யாறு சுகாதார மாவட்டம்


பிறந்து 15 தினங்களுக்குள் போடப்படும் காச நோய் தடுப்பு ஊசி,

போலியோ சொட்டு மருந்து முதல் ஒரு மாத இடைவெளியில் அனைத்து தடுப்பூசிகளும்ஒருவயதிற்குள் போடப்பட்டு விடுகிறது.


பள்ளி குழந்தைகளுக்கு பள்ளி சிறார் நல திட்டம் செயல்படுத்தப்படுகிறது,

வளரிளம் பெண்களுக்கான இரும்பு சத்து மாத்திரை வழங்கும் திட்டம்

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டம்
ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டம்
கர்ப்பினி பெண்களுக்கான முழு பரிசோதனை மற்றும் சத்தான மதிய உணவு

பிரசவத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பினிகளுக்கு மூன்று நாட்களுக்கு மூன்று வேலை உனவு.
24மணி நேர மருத்துவ சேவைக்கு மூன்று செவிலியர்கள் நியமிக்கப்பட்டு பிரசவங்கள் இலவசமாக பார்க்கப்படுகிறது
வளர் இளம் பெண்களுக்கான இரத்த சோகையைதடுப்பதற்காக இரும்பு சத்து மாத்திரைஒவ்வொறு வியாழக்கிழமையும் வழங்கப்பட்டு வருகிறது.
பிறப்பு இறப்புகளை பதிவு செய்தல்
பிறப்பு இறப்புகளை பதிவு செய்பவர்
கிராமங்கள் - கிராம நிர்வாக அலுவலர்
நகராட்சி -துப்புறவு ஆய்வாளர்
மருத்துவமனை -மருத்துவ அலுவலர்
வீட்டில் நிகழ்ந்த பிறப்புகளை குடும்ப தலைவர் உரியவரிடம்

பதிவு செய்யவேண்டும்
பிறப்பு பதிவு பிறந்த இடத்திலேயே பதிவு செய்யப்படவேண்டும்
குழந்தையின் பெயரின்றியே பதிவு செய்ய முடியும்
ஒரு பிறப்பு சான்றிதழ் உங்கள் குழந்தையின் வாழ்வை எளிதாக்குகிறது
இது உங்கள் குழந்தை எந்நாட்டைச் சேர்ந்தது என்பதற்கான சட்டப்பூர்வமான ஆதாரமாகும்
குழந்தையின் பெயரை பதிவு செய்தல்
இலவச பிறப்பு சான்று வழங்குதல்
பிறப்பு சான்றின் பயன்கள்
பிறந்த இடத்திற்கான அத்தாட்சி
பிறந்த தேதி
குடியுரிமைக்குரிய அத்தாட்சி பெற
ஓட்டுனர் உரிமை பெற
பள்ளிகளில் சேர
வயதை நிருபிக்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க

பிறப்பு இறப்பு பதிவின் முக்கியத்துவம் மற்றும் சான்றின் பயன்கள்.



பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை ,

           செய்யாறு சுகாதார மாவட்டம்


பிறப்பு இறப்புகளை பதிவு செய்தல்

பிறப்பு இறப்புகளை பதிவு செய்பவர்


கிராமங்கள் -
கிராம நிர்வாக அலுவலர்.

நகராட்சி- துப்புறவு ஆய்வாளர்.
மருத்துவமனை - 
பொறுப்பு மருத்துவ அலுவலர்.


வீட்டில் நிகழ்ந்த பிறப்புகளை குடும்ப தலைவர்

 பதிவு செய்யவேண்டும்
பிறப்பு பதிவு பிறந்த இடத்திலேயே பதிவு செய்யப்படவேண்டும்.


குழந்தையின் பெயரின்றியே பதிவு செய்ய முடியும்


ஒரு பிறப்பு சான்றிதழ் உங்கள் குழந்தையின் வாழ்வை எளிதாக்குகிறது.


இது உங்கள் குழந்தை எந்நாட்டைச் சேர்ந்தது

 என்பதற்கான சட்டப்பூர்வமான ஆதாரமாகும்


குழந்தையின் பெயரை பதிவு செய்தல்


  இலவச பிறப்பு சான்று வழங்குதல்


   பிறப்பு சான்றின் பயன்கள்


   பிறந்த இடத்திற்கான அத்தாட்சி


   பிறந்த தேதி


   குடியுரிமைக்குரிய அத்தாட்சி பெற


   ஓட்டுனர் உரிமை பெற


   பள்ளிகளில் சேர


   வயதை நிருபிக்க


  பாஸ்போர்ட் விண்ணப்பிக்க


பிறந்து 15 தினங்களுக்குள் போடப்படும் காச நோய் தடுப்பு ஊசி,போலியோ சொட்டு மருந்து முதல் ஒரு மாத இடைவெளியில் அனைத்து தடுப்பூசிகளும்ஒருவயதிற்குள் போடப்பட்டு விடுகிறது
பள்ளி குழந்தைகளுக்கு பள்ளி சிறார் நல திட்டம் செயல்படுத்தப்படுகிறது,வளரிளம் பெண்களுக்கான இரும்பு சத்து மாத்திரை வழங்கும் திட்டம்
டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டம்
ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டம்
கர்ப்பினி பெண்களுக்கான முழு பரிசோதனை மற்றும்

சத்தான மதிய உணவு
பிரசவத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பினிகளுக்கு மூன்று நாட்களுக்கு மூன்று வேலை உனவு.
24மணி நேர மருத்துவ சேவைக்கு மூன்று செவிலியர்கள் நியமிக்கப்பட்டு பிரசவங்கள் இலவசமாக பார்க்கப்படுகிறது
வளர் இளம் பெண்களுக்கான இரத்த சோகையைதடுப்பதற்காக இரும்பு சத்து மாத்திரைஒவ்வொறு வியாழக்கிழமையும்

வழங்கப்பட்டு வருகிறது.
பிறப்பு இறப்புகளை பதிவு செய்தல்
பிறப்பு இறப்புகளை பதிவு செய்பவர்
கிராமங்கள்
நகராட்சி
மருத்துவமனை
வீட்டில் நிகழ்ந்த பிறப்புகளை குடும்ப தலைவர் பதிவு செய்யவேண்டும்
பிறப்பு பதிவு பிறந்த இடத்திலேயே பதிவு செய்யப்படவேண்டும்
குழந்தையின் பெயரின்றியே பதிவு செய்ய முடியும்
ஒரு பிறப்பு சான்றிதழ் உங்கள் குழந்தையின் வாழ்வை எளிதாக்குகிறது
இது உங்கள் குழந்தை எந்நாட்டைச் சேர்ந்தது என்பதற்கான சட்டப்பூர்வமான ஆதாரமாகும்
குழந்தையின் பெயரை பதிவு செய்தல்
இலவச பிறப்பு சான்று வழங்குதல்
பிறப்பு சான்றின் பயன்கள்
பிறந்த இடத்திற்கான அத்தாட்சி
பிறந்த தேதி
குடியுரிமைக்குரிய அத்தாட்சி பெற
ஓட்டுனர் உரிமை பெற
பள்ளிகளில் சேர
வயதை நிருபிக்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க

பயனாளிகள் நல சங்கம்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான உபகரனங்கள் மற்றும் அத்தியவாசிய பொருட்களை ஆரம்ப சுகாதார நிலையங்களே உடனடி தேவைக்கேற்ப வாங்கிகொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.
கட்டிடங்களில்ஏற்படும் சிறு சிறு பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்து கொள்ளப்படுகிறது
அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
புற நோயாளிகளுக் சுத்திகரிக்கப்பட்ட குடி தண்ணீர்
ஆரோக்கியமான சூழலுக்கு நிழல் தரும் மரங்கள்
மூலிகை தோட்டங்கள்
பாதுகாப்பிற்கான சுற்று சுவர்கள்
பாதுகாப்பிற்கான ஜண்ணல்கள் மற்றும் கதவுகள்
குடி நீர் வசதிகள்
நோயாளிகளுக்கு விபரங்கள் தெரிவிக்கும் விளம்பர பலகைகள்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த எதிர்காலத் திட்டம்

தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களை, மத்திய அரசு நிர்ணயித்துள்ள சுகாதார தரத்திற்கு ஏற்ப தன்னிறைவு பெற்ற தரமானதாக மாற்ற முயற்சி நடக்கிறது. இந்த திட்டத்தில் முதல் பகுதியாக 30 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்கள் 2009-ம் ஆண்டுக்குள் தன்னிறைவு பெற்றுவிடும். படிப்படியாக திட்டம் செயல்படுத்தப்பட்டு, போதிய கட்டிட வசதிகள்,போதிய கருவிகள் அனைத்தும் வாங்கப்பட்டு தமிழ்நாட்டில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 2012-ம் ஆண்டுஇறுதிக்குள் இந்திய சுகாதார தரஅளவு பெற்ற தன்னிறைவுபெற்றவைகளாகவிளங்கும்.

"ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் ஆஸ்பத்திரியாக விளங்குகிறது''

ஆரம்பசுகாதாரநிலையங்கள்
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு துணைசுகாதார மையமும், 30 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார மையமும் உள்ளன. பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை தேவைப்படின், முன்னதாக அவர்களை ஆம்புலன்ஸ் வேன் மூலம் பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்து விடுவோம். 24 மணிநேரமும் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப சுகாதார நிலைய போன் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு அவர்கள் அழைத்தால் உடனே ஆம்புலன்ஸ் வேனை அனுப்பி அழைத்து வந்து சிகிச்சைஅளிக்கிறோம்.

அங்குஅனுமதிக்கப்பட்டுகுழந்தைபெற்றுள்ளதாய்கள்கூறியதாவது:- தனியார் ஆஸ்பத்திரி போல நன்றாக எங்களை டாக்டர்களும், நர்சுகளும் கவனிக்கிறார்கள். அதுமட்டும் அல்ல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு திட்டத்தில் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் ஜனனி சுரக்ஷா யோகாஜனம் திட்டத்தில் குழந்தை பெற்று வீடு திரும்பும் முன் எங்களிடம் ரூ.700 தருகிறார்கள். எனவே, இப்போது பல முன்னேற்றங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் காண முடிகிறது. ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள்விளங்குகின்றன.
சத்துள்ளஉணவு

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மதியம் கர்ப்பிணி பெண்களுக்கு சாப்பாடு கொடுக்கப்படுகிறது . அவர்கள் வாழை இலையில் சோறு, சாம்பார், ரசம், மோர், முருங்கை கீரை பொறியல், கூட்டு, அவித்த முட்டை, அவித்த கொண்டைக்கடலை ஆகியவற்றுடன் சாப்பிடுவதை பார்க்க முடிகிறது. வாரம் தோறும் இந்த சாப்பாடு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் மாதம் ஒரு நாள் சாப்பிடுகிறார்கள். சத்துள்ள உணவு சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இந்த சாப்பாடு வழங்கப்படுகிறது.

பயனாளிகள் நல சங்கம்

பயனாளிகள் நல சங்கத்தின் மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலை தற்போது மிகவும் திருப்தி தரும் வகையில் இருப்பதற்கு மணமாற்றம் மற்றும் அரசின் உறுதியான நடவடிக்கையே முக்கிய காரணம்.அரசு ஆரம்ப சுகாதார நிலையமானது மக்களின் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.ஆரம்ப சுகாதார நிலையத்தின் மீது மக்களுக்கு நம்பகத் தன்மை ஏற்பட்டுள்ளது அதற்கேற்ப கர்ப்பினி தாய் மார்கள் பிரசவத்திற்கு முன்பே ஆரம்ப சுகாதார நிலைங்களுக்கு சென்று அங்கிருக்கும் அடிப்படை வசதிகளை தெரிந்துகொள்வதற்காகவே தற்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வளைக்காப்புஎன்றஒரு நிகழ்ச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைங்களில் நடத்தப்படுகிறது. செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 2008ம் ஆண்டில் கீழ் கண்டவாறு பிரசவங்கள் நடைபெற்றுள்ளது.

Friday, January 16, 2009

புதுப்பிக்கப்பட்ட அறுவை அறங்கு துவக்க விழா



அரசு ஆரம்ப சுகாதார நிலைய வசதிகள் மாண்புமிகு உணவு அமைச்சர் திரு.ஏ.வ.வேலு அவர்கள் புதுப்பிக்கப்பட்ட அறுவை அறங்கை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர். இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் துவங்கிவைத்தபோது உடன் மரு.சுரேஸ்,துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், செய்யாறு உள்ளார்

மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் நடமாடும் மருத்துவ ஊர்திகளை வழங்கி துவக்கி வைத்தபோதுஎடுத்தபோது.

மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் நடமாடும்  மருத்துவ ஊர்திகளை வழங்கி துவக்கி வைத்தபோதுஎடுத்தபோது உடன் மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர்,சுகாதாரத்துறை அமைச்சர்,சுகாதாரத்த்றை செயலாளர்,பொது சுகாதாரத்துறை இயக்குநர் ஆகியோர்.

Thursday, January 15, 2009

செய்யாறு சுகாதார மாவட்டம்

தொலைக்கட்சி பெட்டி
ஆரம்ப சுகாதர நிலயங்கள் தற்போது நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.தரமான குடிநீர்,கழிப்பறை,காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமை,பிணியாளர்களுக்கு தொலைக்கட்சி பெட்டி,பிரசவித்த தாய்மார்களுக்கும்,குழந்தைகளுக்கும்,குடிக்க குளிக்க சுடுநீர், என அதிக வசதிகள் இருக்கிறது.
ஜனனி சுரக்ஷா யோஜனா
வறுமை கோட்டிற்கு கீழுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவமான பெண்களுக்கு முதல் இரு பிரசவத்திற்கு ரூ.700/ ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

செய்யாறு சுகாதார மாவட்டம்

கர்ப்பிணி பெண்கள் மருத்துவ உதவிக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவதால் நவீன மருத்துவக் கருவிகள், மேம்படுத்தப்பட்ட மருத்துவக்கூடம் அத்துடன் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்குவது மற்றும் தொலைக்காட்சி தொடர்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

செய்யாறு சுகாதார மாவட்டம்

சத்திய விஜயநகரம் ஆரம்ப சுகாதார நிலையம்:

மூலிகை தோட்டம்:

தற்போது ஆரம்ப சுகாதார நிலைய வளாகத் திற்குள் கொரியன் கிராஸ் புல் வைத்தும், செயற்கை நீரூற்று வைக்க நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். லட்சுமி சரஸ்வதி டெக்ஸ்டைல் நிறுவனம் சார்பில் பூங்காவுடன் செயற்கை நீரூற்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சுகாதார நிலையங்களை நவீனப்படுத்த தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களும் முன் வரலாம்.

செய்யாறு சுகாதார மாவட்டம்


தனியாருக்கு போட்டியாக ஆரம்ப சுகாதார நிலையங்களை நவீனமாக மாற்றி வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. செய்யாறு சுகாதார மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அலுவலகத் திற்கு உட்பட்டு 35 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள் ளன. இதன் கீழ் 157 துணை சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால் நோயாளிகள் சிகிச்சை பெற தயங்கினர். இதனைக் கருத்தில் கொண்டு சுகாதார நிலையங்களை மேம்படுத்தவும், சுகாதாரமாக மாற்றவும் 2007ம் ஆண்டு தேசிய ஊரக சுகாதார திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டத் திற்காக ஆண்டு தோறும் ஒவ் வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் தலா ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப் படுகிறது. இந்த நிதி சுகாதார துறை துணை இயக்குனர் மூலம் அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்களை கொண்ட பயனாளிகள் நல சங்கத்திடம் வழங்கி ஆரம்ப சுகாதார நிலையங்களை பராமரிக்கின்றனர். இதில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங் களிலும் தனியாரை மிஞ்சும் வகையில் சிறப்பு கருவிகள், ஸ்கேன் வசதி, படுக்கை, சிசு வளர்ச்சி, சிசுவின் இதய சோதனை செய்ய சிறப்பு கருவிகள் உட்பட பல மாற்றங்கள் செய்யப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வர "ஆண்டி நேட்டர் கார்டு' (அடையாள அட்டை) வழங்கப்படுகிறது. இந்த அட்டையில் உள்ள எண் ணிற்கு தொடர்பு கொண் டால் ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்து செல்லப்படுவர்.

செய்யாறு சுகாதார மாவட்டம் - பயனாளிகள் நல சங்கம்.

பயனாளிகள் நல சங்கம்.

பயனாளிகள் நல சங்கம் நோயாளிகளின் நலன் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் அத்தியவாசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் நோயாளிகளுகளின் தேவைகளுக்கேற்ப சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக உடனடி தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் உறுவாக்கப்பட்டு அதனை முறையாக பதிவு செய்யப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் செம்மையாக செயல்பட தேவைகளை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அத்தீர்மானத்தின் படி தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது.

Sunday, January 4, 2009

பயனாளிகள் நலச்சங்கம்

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 29 மாவட்ட மருத்துவமனைகள், 157 தாலுகா மருத்துவமனைகள், 1421 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இவைகளில் பயனாளிகள் நலச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வின் தேவைகளை பகுப்பாய்வதற்கும், தீர்மானிப்பதற்கும், முன்னுரிமைப்படுத்துவதற்கும் பயனாளிகள் நலச்சங்கம் வரையறுக்கப்பட்ட காலமுறை நாட்களில் கூடுகிறது. பயனாளிகள் நலச்சங்கங்களின் செயல்பாட்டிற்காக நிதி உதவி வழங்கப்படுகின்றன. மாவட்ட மருத்துவமனை பயனாளிகள் நலச்சங்கம் ஒவ்வொன்றுக்கும் ரூ.5 லட்சமும், தாலுக்கா, தாலுக்க அல்லாத மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் இவைகளில் செயல்படும் பயனாளிகள் நலச்சங்கங்களும் தலா ரூ.1 லட்சம் வீதம் வழங்கப்படுகிறது. மொத்தச் செலவின விடுவிக்கப்பட்ட நிதி ரூ.2601 லட்சம். * சில்லரைச் செலவினங்களை முன்னிட்டு நிபந்தனையற்ற நிதியாக ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆண்டிற்கு ரூ.25 ஆயிரம் வீதம் 1421 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மொத்தமாக ரூ.700 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.* அதே போன்று சில்லரை செலவினங்களை முன்னிட்டு நிபந்தனையற்ற நிதியாக ஒவ்வொரு துணை சுகாதார நிலையத்திற்கும் ஆண்டிற்கு ரூ.10 ஆயிரம் வீதம் 8706 துணை சுகாதார நிலையங்களுக்கும் மொத்தமாக ரூ.2155 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. * ஆண்டு பராமரிப்பு நிதியாக ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தமாக ரூ.1574 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

Patient welfare society

The District Health Society,
Tiruvannamalai has been formed under the chairmanship of the District Collector
and the Deputy Director of Health Services, Tiruvannamalai is the Secretary.
District Panchayat Chairman,
Member of Parliment,
Member of Legislative Assembly of this district are members of the society.
There are 3 MP’s and 4 MLA’s are members for the Cheyyar Health District Area.

Patient welfare society

In Cheyyar Health District, there are 35 Primary Health Centers all are having Patient Welfare Societies which are registered under societies Act formed during March 2007. The fund allotment for Patient welfare societies under NRHM during 2006 – 07 is Rs. 17,50,000.00 and 2007 – 2008 is Rs. 17,50,000.00.

CHEYYAR HEALTH DISTRICT

GENERAL INFORMATION
TOTAL POPULATION : 9,14,880
RURAL : 7,88,341
URBAN : 1,26,539

HEALTH INSTITUTIONS
GOVERNMENT HOSPITALS : 3
UPGRADED GOVT. PHC’S : 4
BLOCK PHC’S : 8
ADDITIONAL PHC’S : 27
HEALTH SUB CENTER’S : 157

Patients welfare society -Cheyyar Health District

A public health scheme is being launched under which all Government hospitals in the State would form Patient Welfare Societies and receive funding under the National Rural Health Mission, the societies would receive seed money from the NRHM and the hospitals could utilise it for emergency requirements and repairs of medical equipment. Unless the hospitals registered the society, The Patient Welfare societies. Those in the Societys can be local public representatives, industrialists and others.