பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை
டாக்டர்.K.S.T.சுரேரெஸ்,MBBS,DPH.,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
செய்யாறு-604407.
அன்புடையீர்,
வணக்கம்.
“அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிகழும் பிறப்பு,இறப்பு மற்றும் இறந்து பிறந்தவைகளை உடனுக்குடன் பதிவு செய்து பொது மக்களுக்கு அப்போதே இலவச சான்றுகளை வழங்கவும் குறிப்பாக பிறப்பு சான்றை உடனடியாக இலவசமாக வழங்கவும் ஏதுவாக ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்களை கூடுதல் பிறப்பு இறப்பு பதிவாளர்களாக நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிகழும் நிகழ்வுகளை 01.08.2009 முதல் அங்கேயே பதிவு செய்திடவும் ஆணை வழங்கியதன் அடிப்படையில் செய்யாறு சுகாதார மாவட்ட்த்தில் உள்ள 38 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பிறப்பு இறப்பு பதிவு அலுவலகம் Iன்று முதல் செயல்பட உள்ளது இனி வரும் காலங்களில் பிறப்பு இறப்பு சான்று பெறுவதில் காலதாமதமின்றி சிக்கலின்றி பொது மக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே இலவச பிறப்பு சான்றுகளை பெற்று கொள்ள முடியும்”.
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
செய்யாறு-604407.